கடலை எண்ணெய்யில் இவ்வளவு மருத்துவ பயன்கள் இருக்கா? வாங்க என்னவென்று பார்ப்போம்

நிலக்கடலையில் இருந்து கடலை எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. நிலக்கடலைக்கு கடலைவேர்க்கடலைகடலைக்காய்கச்சான், மல்லாட்டைமல்லாக்கொட்டைமணிலாக்கொட்டை என பல்வேறு பெயர்கள் உண்டு. சமையலில் பரவலாக பயன்படுத்தப்படும் கடலை எண்ணெய் பல்வேறு அத்தியாவசிய சத்துக்களை தன்னகத்தே அடக்கி உள்ளது.

இது விலை அதிகமுள்ள பாதாம், பிஸ்தா, முந்திரியை விட அதிகசத்து நிறைந்தது. இது ‘ஏழைகளின் பாதாம்‘ என்று அழைக்கப்படுகிறது. பாதாம் பருப்பைவிட உடல் ஆரோக்கியத்துக்கு அதிக நன்மை தரக்கூடியது நிலகடலை என ஆய்வுகள் தெரிவிகின்றன.

இதில் அடங்கியுள்ள சத்துகளை தெரிந்து கொண்டதால் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் பயன்படுத்தும் உணவுப் பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. ஆனால், நிலகடலை அதிகமாக உற்பத்தியாகும் இந்தியாவில், மலிவான விலையில் கிடைப்பதால் இதை அலட்சியப்படுத்தி வருகிறோம்.

பித்தப்பை கல் கரையும்

நிலக்கடலையை தினமும் ஒரு அவுன்ஸ் (30 கிராம்) அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 ஆண்டுகள் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில், 25 சதவிகிதம் பித்தப்பை கல் உருவாகும் வாய்ப்பு குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.

நல்ல கொழுப்பு

இரத்த அழுத்தம் கடலை எண்ணையில் மோனோசாச்சுரேட்டட் பேட் எனப்படும் நல்ல கொழுப்பு நிறைந்திருக்கிறது. இந்த கொழுப்பு உடலில் ஓடும் ரத்தத்தின் சீரான ஓட்டத்தை காக்கிறது.

தசைகள் வலிமையாகும்

நிலக்கடலையில் உள்ள வைட்டமின்-பி உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கக்கூடியது. தசைகளின் வலிமைக்கும் இது தேவையான ஒன்று. உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. குறிப்பாக உடற்பயிற்சி செய்பவர்களுக்கு சிறந்த எனர்ஜி தரும் உணவு.

நினைவாற்றல் அதிகரிக்கும்

இதில் உள்ள வைட்டமின் பி3 மூளையின் செயல்பாட்டைத் தூண்டுவதோடு, நினைவாற்றலையும் அதிகரிக்க உதவும். நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது.

மன அழுத்தம் போக்கும்

நிலக்கடலையில் டிரைப்டோபீன் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இது மூளை நரம்புகளைத் தூண்டும் செரட்டோனின் என்ற உயிர்வேதிப்பொருள் சுரக்க உதவுகிறது. இதனால் மனஅழுத்தம் குறைகிறது.