ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள நிலையில் வழமைக்கு திரும்பியுள்ள கொழும்பு… வீதிகளில் குவிந்துள்ள பொதுமக்கள்…!!

கொரோனா வைரஸ் காரணமாக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தில் இன்னமும் நீக்கப்படவில்லை. எனினும், மீளவும் மக்கள் வாழ்க்கை வழமைக்கு கொண்டு வருவதற்காக கடந்த 11ஆம் திகதி ஊரடங்கு சட்டம் சற்று இலகுபடுத்தப்பட்டுள்ளது.மக்களின் அத்தியாவசிய சேவையை பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.இந்நிலையில், பொது மக்கள் வழமையை போன்று வீதிக்கு இறங்கி செயற்படுவதனை அவதானிக்க முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.விற்பனை நடவடிக்கைகளிலும் கொள்வனவு நடவடிக்கைகளிலும் பொது மக்கள் தீவிரமாக செயற்படுவதற்கு ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.இதேவேளை நேற்றைய தினம் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள பகுதிகளிலும் மதுபான விற்பனை நிலையங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்து, பெருமளவு மக்கள் மதுபானங்களை வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.