மீண்டும் நாடு மூடப்படுமா? இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்

கொரோனாவின் புதிய திரிபான ஒமிக்ரோன் தொற்று நாட்டில் பரவாமல் இருப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் சுகாதார தரப்பினர் மேற்கொண்டுள்ளதாக கொவிட் தடுப்புச் செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா (Shavendra Silva) தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.எதிர்காலத்தில் பயணக்கட்டப்பாடு விதிக்கப்படுமா என கேள்வி எழுப்பப்பட்ட போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

புதிய மாறுபாடு குறித்து வல்லுனர்கள் மாறுபட்ட கருத்துக்களை கொண்டிருப்பதாகவும் அது தொடர்பில் முழுமையாக பகுப்பாய்வுக்கு உட்படுத்திய பின்னர் அதன் பாதுகாப்புக் குறித்து தெரியப்படுத்துவார்கள்.

தற்போது மக்கள் சுதந்திரமாக நடமாடத் தொடங்கி விட்டனர். மக்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டும். அவ்வாறு நடந்து கொள்ளாத பட்சத்தில் நாட்டை முடக்குவது தொடர்பில் ஆராயப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.