யாழ், மேல்மாகாணம் ,கண்டி தவிர்ந்த ஏனைய 19 மாவட்டங்களிலும் நீடிக்கப்படும் ஊரடங்குச் சட்டம்!

மேல் மாகாணத்திலும், யாழ்ப்பாணம், புத்தளம் மற்றும் கண்டி மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் இன்று காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ளது. இன்று இரண்டு மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் ஆறாம் திகதி காலை 6 மணிக்கு மீண்டும் தளர்த்தப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.மேல் மாகாணத்திலும், யாழ்ப்பாணம், புத்தளம் மற்றும் கண்டி மாவட்டங்களில் மீள் அறிவித்தல் வரையில் ஊரடங்கு உத்தரவு தொடரும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.