கஞ்சா வியாபாரி கேரளா கஞ்சாவுடன் கைது

மட்டக்களப்பில் கஞ்சா வியாபாரி ஒருவரை கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

மட்டக்களப்பு வாழைச்சேனை காவல்துறை பிரிவிலுள்ள ஓட்டுமாவடியில் சனிக்கிழமை இராணுவ புலனாய்வு பிரிவினர் கஞ்சா வியாபாரி ஒருவரை 595 கிராம் கேரளா கஞ்சாவுடன் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய சம்பவதினமான சனிக்கிழமை இரவு ஓட்டுமாவடி பகுதிக்கு கேரளா கஞ்சாவை எடுத்து சென்ற கஞ்சா வியாபாரியை இராணுவ புலனாய்வு பிரிவினர் காவல்துறையினருடன் இணைந்து கைது செய்ததுடன் அவரிடமிருந்து 595 கிராம் கேரளா கஞ்சாவை மீட்டனர்.

இதன்போது கைது செய்யப்பட்டவர் வாழைச்சேனை பாருக் நானா வீதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் எனவும் இவர் நீண்டகாலமாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.