தங்கத்தின் விலையின் ஏற்பட்ட அதிரடி மாற்றம்!

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஒமிக்ரோன் புதிய கொரோனா வைரஸ் பரவலால் உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற நிலையில் உலக அளவில் வார இறுதியில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

அந்த வகையில் உலக சந்தையில் தங்கம் ஒரு அவுன்ஸ் 1,783 அமெரிக்க டொலராக உயர்ந்தது.

இது அடுத்த மூன்று முதல் நான்கு வாரங்களில் குறையும் என்று எதிர்பார்க்கப்படவில்லை என சந்தை ஆய்வாளர்கள் குறிப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், ஒமிக்ரோன் கொரோனா வகையின் பரவலை எதிர்கொள்ளும் நிலையில் உலகளாவிய பொருளாதார வளர்ச்சி குறையும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.