குறிஞ்சாக்கேணி படகு விபத்து மரணம் 08 ஆக உயர்வு

கிண்ணியா , குறிஞ்சாக்கேணியில் கடந்த 23 ஆம் திகதிய படகு விபத்தின்போது ஏற்பட்ட உயிரிழப்புக்கள் எட்டாக உயர்ந்துள்ளது.

கிண்ணியாவைச் சேர்ந்த (40 வயது) சக்கரையா ஹாலிசா என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்

குறித்த விபத்தில், இவருடைய மகன் பரீஸ் பஹிர் (வயது 06) அன்றைய தினமே உயிரிழந்திருந்தார்.

கிளிநொச்சி வைத்தியசாலையில் அதி தீவிரசிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,12 நாட்களுக்குப் பின்னர்  நேற்று இரவு 9:00 மணியளவில் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைத்து  சக்கரையா ஹாலிசா உயிரிழந்துள்ளார்.