நாட்டில் பதிவான கோவிட் மரணங்களின் எண்ணிக்கை

நாட்டில் கொவிட் தொற்று காரணமாக மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நாட்டில் இதுவரையில் பதிவான கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14,419 ஆக இருந்தது, தற்போது 14,440 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கோவிட் தொற்றிலிருந்து 474 பேர் பூரணமாக குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய, இதுவரை கோவிட் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 542,010 ஆக அதிகரித்துள்ளது.