கொரோனாவினால் இலங்கையில் 26 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட தேங்காய் ஏலம்..!!

கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் ‘தேங்காய் ஏலம்’ தற்போது இணையத்தளம் ஊடாக இடம்பெறுகிறது.

இதில், பெரும்பாலும் தேங்காய் மற்றும் எண்ணெய் தொழிற்சாலைகளால் தேங்காய் ஏலத்தில் கொள்வனவு செய்யப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.இலங்கையில் தேங்காய் ஏலம், 26 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.கொழும்பு மற்றும் குளியாப்பிட்டிய பகுதிகளில் தெங்கு அபிவிருத்திச் சபையால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவால் 26 ஆண்டுகளுக்கு பின் இணையத்தள இடை தரகர்கள் ஊடாக ஏப்ரல் 9 ஆம் திகதி முதல் கொழும்பில், தேங்காய் ஏலம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.