தேங்காய் எண்ணெய்யில் இவ்வளவு மருத்துவ பயன்கள் இருக்கா? வாங்க என்னவென்று பார்க்கலாம்

தேங்காய் எண்ணெய் பழங்காலத்திலிருந்தே சமையலில் பயன்படுகிறது. . இந்த எண்ணெய் முற்றிய தேங்காயில் இருந்து தயாரிக்கப்படுகின்றது. தேங்காயில் அதிகப்படியான செறிவூட்டப்பட்ட கொழுப்பு  உள்ளதால் ஆக்சிசனேற்றம் மெதுவாக நடக்கிறது.

தேங்காய் எண்ணெயை இன்றும் பலரும் சமையலிலும், மருத்துவத்திலும் பயன்படுத்துகிறார்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்த தேங்காய் எண்ணையில் என்னென்ன மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது என்பதை விரிவாக பார்ப்போம்.

இதயம்

ஒவ்வொரு மனிதனின் எந்த பிரச்சனையும் இன்றி வாழ இதயம் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். தேங்காய் எண்ணையில் சமைக்கப்பட்ட உணவுகள் இதய பாதிப்புகளிலிருந்து நம்மை காக்கிறது. தேங்காய் எண்ணையில் இருக்கும் லாரிக் அமிலம் இதய ரத்த குழாய்கள் மற்றும் உடலில் எல் .டி. எல் எனப்படும் கொலஸ்ட்ரால் கொழுப்பை அதிகம் சேராமல் தடுத்து உடல் நலனை பாதுகாக்கிறது.

புண்கள், காயங்கள்

நமக்கு எதாவது காயம் ஏற்பட்டால் நாம் முதலில் தடவுவது தேங்காய் எண்ணையை தான். தேங்காய் எண்ணெய் காயங்களை ஆற்றுவதோடு மட்டுமல்லாமல், அந்த காயங்களில் நீர் புகாமல் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்துகிறது. மேலும் புண்கள் மற்றும் காயங்களை வேகமாக ஆற்றவும் உதவுகிறது.

தோல்

தேங்காய் எண்ணையில் தோலை மிருதுவாக்கும் மற்றும் சுருக்கங்களை போக்கும் ஆன்டி ஆக்சிடண்ட்கள் அதிகம் உள்ளன.

தலைமுடி

தலைமுடி கொட்டுதல், பித்த நரை, இளநரை, பொடுகு, வழுக்கை போன்ற தலைமுடி சார்ந்த பிரச்சனைகள் இருப்பவர்கள் தினமும் தலைக்கு தேங்காய் எண்ணெயை தேய்த்து வருவதன் மூலம் தலை முடி சார்ந்த பிரச்சனைகள் குறையும்.

வாய், பற்கள் மற்றும் ஈறுகள்

தினமும் காலையில் சிறிதளவு தேங்காய் எண்ணெயை வாயில் ஊற்றி ஒரு 20 நிமிடங்கள் வாயை நன்கு கொப்பளித்து பிறகு, அந்த எண்ணையை துப்பி விட வேண்டும். இதற்கு ஆங்கிலத்தில் ஆயில் புல்லிங் என்று கூறுவார்கள். இதை தினந்தோறும் செய்து வருபவர்களுக்கு பற்சொத்தை, ஈறுகள் வலுவிழப்பது, வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி

நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பலமாக இருந்தால் தான் எந்த நோயையும் எதிர்த்து போராட முடியும். தேங்காய் எண்ணெய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எதிர்காலத்தில் நோய்கள் ஏற்படாமல் தடுப்பதோடு, ஏற்கனவே இருக்கும் நோய்களை இருந்த இடம் தெரியாமல் வெளியேற்றும்.

ஜீரண உறுப்புக்கள்

வயிறு மற்றும் குடல்களில் ஏற்படும் அல்சர், குடல்களில் தங்கியிருக்கும் நச்சுக்கள், மலச்சிக்கல், அஜீரணம் போன்றவை விரைவில் நீங்க தேங்காய் எண்ணெய் மூலம் செய்யப்பட்ட உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் சிறந்த நிவாரணம் பெற முடியும்.