முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் சமைத்து கொண்டிருந்த போது வெடித்து சிதறிய அடுப்பு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட புதுக்குடியிருப்பு மேற்கு கிராம அலுவலர் பிரிவில் உள்ள வீடொன்றில் இன்று காலை 11 மணியளவில் காஸ் அடுப்பு வெடித்த சம்பவம் பதிவாகியுள்ளது.

சமைத்து கொண்டிருந்த போதே இச்சம்வம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில், அடுப்புக்கு அருகில் யாரும் அச்சந்தர்ப்பத்தில் இருக்காமையால், தெய்வாதீனமாக உயிர்களுக்கு எவ்விதமான ஆபத்தும் ஏற்படவில்லை.

இதேவேளை நாடளாவிய ரீதியில் பல்வேறு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்ற போதும் முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவாகிய முதலாவது சம்பவம் இது ஆகும். மேலும் இந்த சம்பவம் முல்லைத்தீவு மக்கள் மத்தியில் மிகவும் அச்சத்தை உண்டு பண்ணியுள்ளது.