நாளை முதல் நாட்டின் சில பகுதிகளில் ஒரு மணிநேரம் மின்வெட்டு!

நாளை முதல் நாட்டின் சில பகுதிகளில் ஒரு மணிநேரம் வரை மின்வெட்டு அமுலபடுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாளை முதல் எதிர்வரும் நான்கு நாட்களுக்கு மாலை 6 மணி முதல் இரவு 09.30 மணி வரை வெவ்வேறு இடங்களுக்கு ஒரு மணிநேரம் மின்சாரம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை முழுவதுமாக வழமைக்கு கொண்டு வர சில நாட்கள் தேவைப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, மின்சாரத் தேவையின் அடிப்படையில் குறுகிய கால மின் விநியோக தடை ஏற்படக்கூடும் என மின்சார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை நேற்று பிரதான மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாடளாவிய ரீதியில் மின்சாரம் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.