கொழும்பு மாநகரில் குடிசை வீடுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு அடித்த அதிஷ்டம்..!!

கொழும்பில் குடிசை வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு புதிய வீடுகளை கட்டிக்கொடுக்கும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன்படி குடிசை வீடுகளில் வசிக்கும் சுமார் 40,000 பேருக்கு இவ்வாறு வீடுகள் கட்டிக்கொடுக்கப்படவிருக்கின்றது.இதன் முதற்கட்டமாக இராஜகிரிய – ஒபேசேகர அருணோதய மாவத்தை பகுதியில் இந்த வீடமைப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளது.
இதில் 300 வீடுகள் நிர்மாணிக்கப்பட உள்ளதாக, நகர அபிவிருத்தி நீர் வளங்கள் வீடமைப்பு வசதிகள் அமைச்சு தெரிவித்துள்ளது.ஆசிய வங்கியின் கடன் உதவியின் கீழ் இந்த தொடர்மாடிக் குடியிருப்பு நிர்மாணிக்கப்பட உள்ளதுடன் இதற்காக 1733.24 மில்லியன் ரூபாய் செலவிடப்படவிருக்கின்றது.