புற்று நோயாளிகளுக்காக தனது தலைமுடியைத் தியாகம் செய்த இலங்கையின் முன்னாள் இளம் பெண் பாராளுமன்ற உறுப்பினர்..!!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, தனது தலைமுடியின் பெரும் பகுதியை வெட்டி, அதனை புற்றுநோயால் அவதியுறும் நோயாளிகளுக்கு போலி சிகை செய்யும் திட்டத்திற்கு வழங்கியுள்ளார். பல வருடங்களாக வளர்த்து பேணி காத்து வந்த தனது நீளமான தலை முடியை வெட்டியமை தொடர்பில் தனது பேஸ்புக் பக்த்தில் கருத்துத் தெரிவித்துள்ள அவர்;

புற்றுநோய்… இது அந்நோயாளிக்கு மட்டுமல்லாது அவரது அன்புக்குரியவருக்கும் ஒரு பயமுறுத்தும், கொடூரமான, துக்ககரமான அனுபவமாகும். ஆம் .. அவர்களது வலியை எங்களால் நீக்க முடியாதுதான் ஆனால் குறைந்தபட்சம் ஒரு கணமாவது அவர்களை மகிழ்விக்க முடியும். எனவே, நான் எனது தலைமுடியை ஒரு புற்றுநோயாளிக்கு தானம் செய்ய முடிவு செய்துள்ளேன். அது என்னை விட அவருக்கே அதிகமாக தேவைப்படும். பெண்களாகிய உங்கள் அனைவருக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன். நீங்கள் ஒரு உங்கள் முடியை வெட்ட நினைத்தால், அதனை தூக்கி எறிய வேண்டாம். தயவுசெய்து, அதை தேவையானவர்களுக்கு நன்கொடையாக அளிக்கவும். நன்றி ‘ இவ்வாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.