மின் பாவனையாளர்களுக்கு விசேட அறிவிப்பு

நாட்டில் அவ்வப்போது மின்விநியோகத் தடை ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை மின் விநியோக மையத்தின் பணிகள் வழமைக்குத் திரும்ப குறைந்தது 2 நாட்கள் எடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மின்சார சபை இதனைத் தெரிவித்துள்ளது.

நுரைச்சோலையில் இரண்டு நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் செயலிழந்துள்ளதாகவும், ஒரு நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் தற்போது வரையில் பழுது பார்க்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இன்று முற்பகல் 11.30 முதல் மின் விநியோகம் தடைப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தடைப்பட்டிருந்த மின்விநியோகம் இன்று மாலை 4.30 அளவில் வழமைக்கு திரும்பியதாக இலங்கை மின்சார சபை தெரிவித்திருந்ததுடன், கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மின்தடை 4.30 இற்கு பின்னரும் மின்தடை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.