சமையல் எரிவாயு கொள்கலன் எங்கள் வீட்டுக்கு வெளியிலேயே இருக்கின்றது : என்கிறார் நாமல்

தமது வீட்டில் சமையல் எரிவாயு கொள்கலன் வீட்டுக்கு வெளியிலேயே வைக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 

கிராமத்தில் வசித்த மக்கள் என்ற வகையில் ஆரம்ப முதலே சமையல் எரிவாயு கொள்கலனை வீட்டுக்குள் எடுக்கவில்லை.

இதனால், தற்போது கூட எமது வீட்டுக்கு வெளியிலேயே எரிவாயு கொள்கலன் வைக்கப்பட்டுள்ளது எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் வீடுகளில் எரிவாயு கொள்கலன்கள் வெடித்து தற்போது ஏற்பட்டு வரும் விபத்துகள் பற்றி

செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.