நாடளாவிய மின் விநியோகத் தடை தொடர்பில் சற்று முன் வெளியான தகவல்….!

நாட்டின் பல பகுதிகளிலும் தடைப்பட்டிருந்த மின் விநியோகம் தற்போது வழமைக்குத் திரும்பி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அனுராதபுரம் -ஹபரண, லக்ஸபான -அத்துருகிரிய மற்றும் கொத்மலை – பியகம மின் விநியோகத் தொகுதிகளில் மின் விநியோகம் மீள வழமைக்குத் திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நாட்டில் ஏற்பட்ட மின் விநியோகத் தடையானது பொறியியலாளர்கள் சங்கத்தின் சதி வேலையாக இருக்கலாம் என அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

அத்துடன், மின் விநியோகத் தடையை மீளமைக்கும் நடவடிக்கைகளை பொறியியலாளர்கள் வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

எனினும், இதுவரை 300 மெகாவோட் மின்சாரம் மீள வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்