இலங்கையில் இப்படி ஒரு மூதாட்டியா! 84 வயது மூதாட்டியின் வியக்கவைத்த செயல்

ஹெட்டிமுல்ல கனிஷ்ட பாடசாலை மாணவர்கள் கண்டி-கொழும்பு பிரதான வீதியைக் கடப்பதற்கு, 40 வருடங்களுக்கும் மேலாக மூதாட்டியொருவர் உதவி செய்து வருகின்ற தகவல் வெளியாகியுள்ளது.

 

ட்ரபிக் ஆச்சி என அழைக்கப்படும் அந்த மூதாட்டிக்கு தற்போது 84 வயது. கே. லில்லி வயலட் என்ற அந்த மூதாட்டி, மே 5, 1938 அன்று கேகாலையில் பிறந்தார். கணவர் இலங்கை போக்குவரத்து சபையின் சாரதியாக பணியாற்றினார்.

இந்நிலையில் தனது மகளுக்கு மூன்று வயதாக இருந்தபோதே கணவர் உயிரிழந்து விட்டதாக  அந்த மூதாட்டி குறிப்பிடுகிறார். அதன் பின்னர் , ”1980 ஆம் ஆண்டு எனது மகள் மங்கலிகா ஹெட்டிமுல்ல ஜூனியர் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

முதல் நாளிலேயே குழந்தைகள் வீதியைக் கடப்பது எவ்வளவு சவாலானது என்பதை நான் கவனித்தேன், அவர்களின் உயிருக்கு ஆபத்து உள்ளது. இதைப் பார்த்து நான் மிகவும் வருத்தப்பட்டேன், 41 ஆண்டுகளாக குழந்தைகள் வீதியைக் கடக்க தான் உதவிபுரிவதாக  மூதாட்டி புன்னகையுடன் கூறினார்.

அத்துடன் நான் சாலையைக் கடக்க உதவிய மாணவர்களில் சிலர் இப்போது வளர்ந்து பெரியவர்களாக நல்ல வேலைகளைச் செய்கிறார்கள், அவர்கள் பரிசுகளுடன் என்னைச் சந்திக்கத் தவறுவதில்லை, என்றும்  அவர் பெருமையுடன்  கூறினார்.

இதேவேளை இந்த தள்ளாத வயதிலும் அந்த மூதாட்டி போக்குவரத்து போலீசார் வழங்கிய தொப்பி மற்றும் ஜாக்கெட்டை அணிந்து, 84 வயதிலும் தனது பணியை தொடர்கிறார்.