கொழும்பிலிருந்து மாலைதீவு நோக்கிப் புறப்பட்ட இலங்கை விமானம்..!!

இலங்கையில் இருந்து விசேட விமானம் ஒன்று மாலைதீவை நோக்கிப் புறப்பட்டுள்ளது.

மாலைத்தீவில் இருக்கும் இலங்கையர்களை அழைத்து வருவதற்கு குறித்த விசேட விமானம் புறப்பட்டுள்ளது. கொரோனா பரவல் நிலையையடுத்து, மாலைதீவில் சிக்கித் தவிக்கும் 288 இலங்கையர்களை அழைத்து வருவதற்கு இவ்வாறு குறித்த விசேட விமானம் புறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.