எப்படி மனச்சாட்சி இல்லாமல் உங்களால் கேட்க முடியும்…? ஹர்பஜன், யுவராஜை குமுறும் ரசிகர்கள்!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாகியுள்ள நிலையில் கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ் சிங் மற்றும் ஹர்பஜன் சிங் செயலை ரசிகர்கள் வன்மையாக கண்டித்து வருகின்றனர்.


உலகத்தை முடக்கி போட்டுள்ள கொரோனா இந்தியாவிலும் மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. பஞ்சாப்பில் இதுவரை 41 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில், 4 பேர் உயிரிழந்துள்ளனர்.பாகிஸ்தானிலும் கொரோனா பாதிப்பு மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது. பாகிஸ்தான் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அந்நாட்டு கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில் ஷாகித் அஃப்ரிடிக்கு ஆதரவாக பதிவிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ் சிங் மற்றும் ஹர்பஜன் சிங், இந்தியர்கள் பாகிஸ்தானுக்கு நிதி உதவி அளிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.இதற்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். சீக்கியர்களின் பிறப்பிடமான பஞ்சாப் கொரோனா தாக்கத்தால் அழிந்து வருகிறது. அதற்கு உதவி கேட்டு ஒரு பதிவு கூட இடாமல், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்க உங்களுக்கு எப்படி தோன்றுகிறது? என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். அதை தொடர்ந்து இணையத்தில் #ShameOnYuviBhajji என்ற ஹேஷ்டேக் இணையத்தில் வைரலாகியுள்ளது.