இலங்கையில் அதிகரிக்கிறது பஸ் கட்டணம்?

ஜனவரி முதலாம் திகதியிலிருந்து தனியார் பஸ் கட்டணங்களை அதிகரிக்குமாறு, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.

தமது இந்த ​யோசனையை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கும் போக்குவரத்து அமைச்சருக்கும் அடுத்த வாரம் அனுப்பவுள்ளதாக கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, ஆகக் குறைந்த பஸ் கட்டணமாக 20 ரூபாய் காணப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.