பொல்லால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நபர்! மாத்தளையில் சம்பவம்

மாத்தளை பேருந்து தரிப்பித்திடத்துக்கு அருகிலிருந்து ஆண் ஒருவரின் சடலத்தை மாத்தளைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த தகவலை இன்று பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ளது.

பரமநாதன் தினேஸ்குமார் என்ற 35 வயதுடைய நபரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் பொல்லால் தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று மாத்தளை குற்றப் புலனாய்வுப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.