நீங்க பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவரா? உங்க வாழ்க்கை அமைப்பு இப்படிதான் இருக்குமாம்

நட்சத்திரம் : பூராடம்

பூராடம் நட்சத்திரத்தின் ராசி : தனுசு

பூராடம் நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன்
பூராடம் நட்சத்திரத்தின் ராசி அதிபதி : குரு

பூராடம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் :

இவர்களுக்கு ஆடை ஆபரணங்கள் அணிவதில் அதிக ஆர்வம் இருக்கும். கனிவான பார்வையை கொண்டவர்கள். எந்த பிரச்சனைகளை எதிர்த்து நின்று  பயப்படாமல் நினைத்ததை செயல்படுத்துவார்கள். பழகுவதில் யாரிடமும் பாகுபாடு காட்ட மாட்டார்கள். வெள்ளந்தியான மனம் கொண்டவர்கள்.

அழகாக இருப்பதை விரும்புவார்கள். கற்பூர புத்திகார்கள். எல்லா  விஷயத்தையும் எளிதில் கிரகித்து கொள்ளும் ஆற்றல் கொண்டவர்கள். பொறுமையாக இருந்து காரியத்தை சாதிக்க கூடியவர்கள். நல்ல அழகான தோற்ற பொலிவு கொண்டவர்கள்.

 

இவர்களுக்கு தோல்வியை தாங்கும் மனபக்குவம் கிடையாது. தன்னை நம்பி வருவோர்க்கு வழிகாட்டியாக திகழ்வார்கள். காரியங்களை திட்டமிட்டு செயல்படுத்துவதில் வல்லவர்கள். சுத்தமாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள்.

மற்றவர்களிடம் திறமையாக வேலை வாங்குவதில் கில்லாடிகள். பிரயாணம் செய்வதில் விருப்பமுடையவர். தரும சிந்தனை உடையவர். பிடிவாத குணம் கொண்டவர். பிறருடன் ஏற்படும் வாக்கு வாதங்களில் பெரும்பாலும் இவரே வெற்றி பெறுவார்.

பூராடம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்கள் தன்னம்பிக்கை மிகுந்தவர்கள். பிறரை நம்பி எந்த பொறுப்பையும் ஒப்படைக்க மாட்டார்கள். செய்வதை சரியாக செய்ய வேண்டும் என நினைப்பவர்கள். போதுமென்ற மனம் இவர்களுக்கு உண்டு.

பூராடம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்கள் தன்னை அழகுபடுத்தி கொள்வதில் விருப்பமுள்ளவர். இரக்க குணம் கொண்டவர்கள். எல்லோருக்கும் உதவும் மனம் கொண்டவர்கள். பிறரை கவர்ந்து இழுக்கும் பேச்சு திறமை கொண்டவர்கள்.

பூராடம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்கள் தெளிவான சிந்தனை கொண்டவர்கள். எதையும் திட்டமிட்டு செய்வார்கள். அதே சமயம் ஆவேச குணம் கொண்டவர்கள். எதிலும் முன் எச்சரிக்கையுடன் இருப்பார்கள். ஒழுக்கம் மற்றும் நேர்மையுடன் இருக்க விரும்புவார்கள்.

பூராடம் நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்கள் பிறரை அடக்கி ஆள நினைப்பார்கள். தன்னை வித்தியாசபடுத்தி காட்ட மற்றவர்களிடம் இருந்து விலகியே இருப்பார்கள். எடுத்து கொண்ட காரியத்தை முடிக்க தீவிரமாக உழைக்க கூடியவர்கள்.