தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ள யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம்

யாழ்.பல்பகலைக்கழக ஊழியர் சங்கம் நாளை மௌன தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அதன் தலைவர் த.சிவரூபன் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பில் அவர் நேற்று இரவு  வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழுவின் தீர்மானத்துக்கமைய நீண்டகாலமாக நிலவி வரும் பல்கலைக்கழக கல்விசாரா பணியாளர்களின் சம்பள

முரண்பாடு மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவருக்கு 23.11.2021 வழங்கப்பட்ட கடிதத்தின் பிரகாரம் மேற்படி அடையாள மௌன தொழிற்சங்கப் போராட்டம் இலங்கையின் சகல பல்கலைக்கழகங்களிலும் மேற்கொள்ளப்படுகின்றது.