இலங்கையில் சற்று முன் சடுதியாக அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள்..!! நாட்டு மக்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி..!!

இலங்கையில் மேலும் 22 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை இதுவரை (14.05.2020 – 6.00 மு.ப) 915 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 382 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.இந்நிலையில், கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள 502 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.105 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.அத்தோடு, கொரோனா தொற்றுக்கு இலக்காகி இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.