இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான முப்படையினர் மற்றும் உறவினர்களின் உண்ணிக்கை 501 ஆக உயர்வு..!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான முப்படையினர் மற்றும் அவர்களுக்கு மிக நெருக்கமான உறவினர்களின் மொத்த எண்ணிக்கை 501 ஆக உயர்வடைந்துள்ளது. இலங்கையில், இதுவரையில் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் மொத்த எண்ணிக்கை 893 ஆக உயர்வடைந்துள்ளது.இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களில் 382 நோயாளிகள் இதுவரையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.கொரோனா நோய்த் தொற்றினால் அதிகளவு பாதிக்கப்பட்ட மாவட்டமாக கொழும்பு மாவட்டம் காணப்படுகின்றது, அந்த மாவட்டத்தில் 150 நோய்த் தொற்றாளிகள் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.