தங்களின் பாதுகாப்புக்காக ஹெல்மட் அணிந்து சமைக்கும் இலங்கை பெண்கள் ( வைரலாகும் புகைப்படம்)

நாடு முழுவதும் பல பகுதிகளில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் வீட்டில் இருக்கும் பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

அதற்கமைய தற்போது பாதுகாப்பிற்காக பெண்கள் ஹெல்மட் பயன்படுத்த பழகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஹெல்மட் பயன்படுத்திய நிலையில் சமையலில் ஈடுபடும் பெண்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

அதற்கமைய பலப்பிட்டிய வத்துகெதர பிரதேச வீடு ஒன்றில் பெண்ணொருவர் ஹெல்மட் பயன்படுத்தும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.