சற்று முன்னர் முன்னாள் அமைச்சர் ராஜித அதிரடியாகக் கைது..!!

முன்னாள் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன குற்றப் புலனாய்வுப் பிரிவில் சரணடைந்துள்ளார். வெள்ளைவான் கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் ஊடகங்களில் தகவல் வெளியிட்டிருந்த சம்பவம் குறித்தே ராஜிதவை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்ய அவரது வீட்டிற்கு சென்றிருந்தனர்.இவ்வாறான ஓர் பின்னணியில் சற்று முன்னர் ராஜித குற்ற விசாரணைப் பிரிவில் சரணடைந்துள்ளார்.இவ்வாறு சரணடைந்த முன்னாள் அமைச்சர் ராஜிதவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட ராஜித சேனாரட்ன நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.