யாழில் தொடர்ந்து கரை ஒதுங்கும் சடலங்கள்: வடமராட்சியில் நேற்றும் கரை ஒதுங்கிய உருக்குலைந்த சடலம்!

யாழ்.வடமராட்சி கிழக்கு மருதங்கேணிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்டுவெற்றிலைக்கேணி கட்டைக்காட்டுப் பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று நேற்றுச் செவ்வாய்க்கிழமை கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது.

வடமராட்சி கிழக்கு மணற்காடு, வல்வெட்டித்துறை ஆகிய பகுதிகளில் கடந்த-27 ஆம் திகதி சனிக்கிழமை இரு சடலங்கள் கரை ஒதுங்கியிருந்தன.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை நெடுந்தீவுக் கடற்கரையில் மேலும் ஒரு நபரொருவரின் சடலம் கரை ஒதுங்கியிருந்தது. இந்நிலையில் வெற்றிலைக்கேணி கட்டைக்காட்டுப்

பகுதியில் உருக்குலைந்த நிலையில் இனம்தெரியாத மேலும் ஒருவரின் சடலம் நேற்று கரை ஒதுங்கியுள்ளது.