பெரியபரந்தனில் புதிய மதுபான சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சி -பெரிய பரந்தன் பிரதேசத்தில் புதிய மதுபானசாலை அமைப்பதற்கு
எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் மீண்டும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
ஒன்றை நேற்று மேற்கொண்டனர்.

.பெரிய பரந்தன் பிரதேசத்தில் புதிதான மதுபானசாலை ஒன்று  அமைப்பதற்கு
நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பில் கடந்த காலத்தில்
பெரியபரந்தன் மக்கள் தொடர்ச்சியாக  எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு

வருகின்றனர். உரிய உயர் அதிகாரிகளுக்கு எழுத்து மூலம்  ஆட்சேபனைகளை
அனுப்பியதோடு பல தடவைகள் பொது மக்கள் ஒன்று சேர்ந்து எதிர்ப்பு
ஆர்ப்பாட்டம் ஒன்றையும் மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் மீண்டும் நேற்று கரைச்சி பிரதேச செயலகம் முன்பாக
பெரியபரந்தன் மக்கள் மதுபானசாலை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து
ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

புதிய மதுபானசாலை அமையவுள்ள இடத்திற்கு அருகில் கிளிநொச்சி இந்துக்
கல்லூரி, கிளிநொச்சி புனித திரேசா பெண்கள் கல்லூரி, மற்றும் விஞ்ஞானக்

கல்வி நிலையம் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் காணப்படுவதாக பலமுறை மகஜரில்
சுட்டிக்காட்டப்பட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை
எனப் பொது மக்கள் தெரிவித்தனர்.