வரலாற்றில் முதல்தடவையாக செங்கோலுடன் நடந்த யாழ்.மாநகரசபை அமர்வு

வரலாற்றில் முதல் தடவையாக யாழ்.மாநகரசபையின் அமர்வு நேற்றுச் செவ்வாய்க்கிழமை  செங்கோலுடன் இடம்பெற்றது.

அண்மையில் குகபதமடைந்த நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் 10 ஆவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் நினைவாக யாழ்.மாநகர

முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனின் வேண்டுகோளுக்கு இணங்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய நிர்வாகம் அண்மையில் யாழ்.மாநகர சபைக்கு

செங்கோலொன்றினைக் கையளித்திருந்தது.

இந்நிலையில் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் 11 ஆவது நிர்வாக அதிகாரி குமரேஷ் சயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் வடிவமைப்பில்

உருவாக்கப்பட்ட செங்கோலுடன் வரலாற்றில் முதல் தடவையாக யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் நேற்றைய தினம் யாழ்.மாநகர சபை அமர்வு நடந்தேறியிருந்ததையும் இங்கு குறிப்பிடத்தக்கது.