இலங்கையில் இன்று மேலும் 02 பேருக்கு கொரோனா..!! மொத்த எண்ணிக்கை 891 ஆக உயர்வு..!!

இலங்கையில் மேலும் 02 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 891 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.மேலும், கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியவர்களில் 382 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.இவ்வாறு தொற்று உறுதியாகியவர்களில் 500 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.