பிரித்தானியாவில் இளம் பெண் ஒருவருக்கு ஏற்பட்ட கொடூரம்!

பிரிட்டனில் பெண் மருத்துவர், மீது அவரின் முன்னாள் காதலன் ஆசிட் வீசிய சம்பவம் தொடர்பில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

 

பிரிட்டனை சேர்ந்த பெண் மருத்துவரான Dr Rym Alaoui-ன் வீட்டில் இரவு நேரத்தில் கதவு தட்டும் சத்தம் கேட்டுள்ளது. அவர் கதவைத் திறந்த அடுத்த நொடி, ஒரு பெண் அவரின் முகத்தில் ஆசிட் வீசி விட்டு தப்பி ஓடினார்.

அவரின் அலறல் சத்தத்தை கேட்ட அண்டை வீட்டார் ஓடிவந்து ஆம்புலன்ஸ் வரவழைத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். Dr Rym Alaoui மீது ஆசிட் வீசிய பெண்ணை காவல்துறையினர் தேடி வந்தபோது, கண்காணிப்பு கேமராக்களில், அந்த பெண் கடைசியாக ஆண் உருவத்திற்கு மாறினார்.

அதன்பின்பு தான் மருத்துவர் மீது ஆசிட் வீசியது, ஆண் என்பது தெரியவந்தது. அதாவது ஒரு நபர் பெண் போன்று வேடமிட்டு மருத்துவரின் முகத்தில் ஆசிட் வீசியிருக்கிறார்.

அந்த நபர் குறித்து விசாரணை மேற்கொள்ளும் போது, Dr Rym Alaoui-உடன், பயிற்சி பெற்ற மருத்துவ மாணவர் Milad Rouf என்பது தெரிய வந்திருக்கிறது. அதன்பின்பு, காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

அவர் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதாவது இருவரும் ஒன்றாக Cardiff என்ற பல்கலைக்கழகத்தில் மருத்துவக்கல்வி பயின்றுள்ளனர். அப்போது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பரவிய சமயத்தில் இருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை. அதன்பின்பு, Dr Rym Alaoui, அந்த நபருடன் பேசவில்லை. எனவே, அவரை பழி வாங்கும் நோக்கில் அவர் மீது ஆசிட் வீசி சென்றுள்ளார்.

தற்போது, Dr Rym Alaouiயின் முகம், கண்கள், கழுத்து, மார்பு பகுதி மற்றும் கைகளில் ஆசிட்டால் ஏற்பட்ட காயம் இருக்கிறது. மேலும் அவர், தன் வலது கண் பார்வையை இழந்துவிட்டார்.

இரவு சமயங்களில் தூங்கும்போது கண் இமைகளைக்கூட மூட முடியாமல் சிரமப்படுகிறார். எனவே, அவரின் சிகிச்சைக்காக, குடும்பத்தினர் நிதி திரட்டி வருகிறார்கள்.

இதேவேளை, தாக்குதலுக்கு இலக்கான வைத்தியர் Rym Alaoui இன் சிகிச்சைகளுக்கு 60,000 பவுண்டுகளுக்கு மேல் தேவைப்படும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து குடும்பத்தினர் கருத்து வெளியிடுகையில்,

“அன்பான மற்றும் அக்கறையுள்ள’ இளம் மருத்துவர் பல ஆண்டுகளாக வலிமிகுந்த அறுவை சிகிச்சையை எதிர்கொள்கிறார், ஆனால் NHS இல் தனது கனவு வேலைக்குத் திரும்ப ஆசைப்படுகிறார்.

‘பயங்கரமான தாக்குதலில்’ அவரது முகம், கழுத்து, கண்கள், மார்பு மற்றும் கைகளில் பலத்த தீக்காயங்களுக்கு ஆளாகியுள்ளார். வலது கண்ணில் பார்வையற்றவராகவும், இரவில் இமைகளை மூட முடியாதவராகவும் இருந்துள்ளார்.

ஏற்கனவே ஏழு அறுவை சிகிச்சைகளை மேற்கொண்ட போதிலும், இன்னும் பல வருடங்களாக தோல் ஒட்டுதல்கள், கண் அறுவை சிகிச்சைகள் மற்றும் அவரது தீக்காய வடுக்கள் மீது லேசர் சிகிச்சையை எதிர்கொள்ளவுள்ளதாக” குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

இதேவேளை, தாக்குதலை மேற்கொண்ட நபருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.