யாழில் சோகத்தை ஏற்படுத்திய இரண்டு வயது குழந்தையின் மரணம்

யாழ்.தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேந்தாங்குளம் பகுதியில், கிணற்றில் விழுந்து இரண்டு வயது குழந்தையொன்று இன்றிரவு பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

 

குறித்த குழந்தை இன்று மதியம் கிணற்றில் விழுந்த நிலையில்,மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றிரவு உயிரிழந்துள்ளது.

இச்சம்பவம் அப்பகுதி மக்களை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.