இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனைகள் 7 பேருக்கு கொவிட் தொற்று!

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனைகள் 7 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மகளிர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதிகாண் போட்டியில் பங்கேற்பதற்காக சிம்பாப்வே சென்றுள்ள நிலையிலேயே, வீராங்கனைகளுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சிறிலங்கா மகளிர் கிரிக்கெட் அணிக்காக ஒரு விமானத்தை முன்பதிவு செய்வது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) தற்போது விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சிறிலங்கா கிரிக்கெட் (SLC) பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா தெரிவித்துள்ளார்.

 

கொவிட் பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி மற்றும் விளையாட்டு வீரர்கள் இன்னும் சிம்பாப்வேயில் தங்க வேண்டியிருக்கும் என்று ஆஷ்லி டி சில்வா மேலும் கூறினார்.