அதிகரிக்கப்பட்டது உணவு பொருட்களின் விலை

கோதுமை மாவின் விலையை கடந்த சனிக்கிழமை முதல் கிலோ ஒன்றுக்கு 17ரூபா 50 சதத்தினால் அதிகரித்துள்ளமையை வரையறுக்கப்பட்ட பிரிமா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டமை காரணமாக நாட்டில் நேற்று பல்வேறு கோதுமை மா உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டது.

இதன்படி பாணின் விலை 10 ரூபாவாலும், கொத்துரொட்டி 10 ரூபாவாலும், சிற்றுண்டிக்களான ரோல்ஸ், முட்டை ரொட்டி, மரக்கறி ரொட்டி போன்றவற்றின் விலை 5 ரூபாவாலும் உயர்த்தப்பட்டன.