எரிவாயு சிலிண்டர் கசிவிலிருந்து தனது குடும்பத்தை காப்பாற்றிய சிறுமி

புத்தளம் வைரங்கட்டுவ, தலுவ, ஆராச்சிக்கட்டுவ ஆகிய இடங்களில் இரண்டு வீடுகளில் ஏற்பட்ட எரிவாயு கசிவு காரணமாக சிலிண்டர் தீப்பிடித்து எரிந்ததாகவும், மற்றைய வீட்டில் இருந்த எரிவாயு தாங்கி உடனடியாக வெளியேற்றப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

புத்தளம் தளுவையில் உள்ள வீடொன்றில் இருந்த சிறுமி ஒருவர் எரிவாயு சிலிண்டரிலிருந்து வெளிவரும் சத்தத்தை கேட்டு பெரியவர்களுக்கு தெரியப்படுத்தி பல உயிர்களை காப்பாற்றியுள்ளார்.

புத்தளம், தலுவ நிர்மலாபுர பகுதியைச் சேர்ந்த 8 வயதுடைய அமயா பஹண்டி என்ற சிறுமி, வீட்டில் உள்ள அறையொன்றில் எரிவாயு சிலிண்டர் கூடுதலாக சத்தம் எழுப்பியதையடுத்து, தனது தந்தை மற்றும் தாயாருக்கு அறிவித்து எரிவாயு தாங்கியை பாதுகாப்பாக அகற்றியுள்ளார்.

ஆராச்சிக்கட்டுவ வைரசன்கட்டுவ பகுதியில் உள்ள வீடொன்றில் உள்ள எரிவாயு தாங்கியில் தீ பரவியதையடுத்து அயலவர்கள் அதனை நீர் மற்றும் மணலைக் கொண்டு அணைத்துள்ளனர்.