ஒரே நாளில் மலக்கழிவுகள் அனைத்தும் வெளிவரும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்..!!

வகை வகையான உணவுகளை சமைத்து வைத்தாலோ அல்லது கடைகளில் உணவை பார்த்தாலோ நம் அனைவருக்கும் ஒரு நொடி நாக்கில் எச்சில் ஊறும். இந்த நிலையில் நம் மூளையை முழுவதுமாக கழட்டி வைத்து விட்டு மனசு சொல்லும்படி பிடித்த உணவுகளையெல்லாம் சாப்பிட்டு கொண்டே இருப்போம்.

இதனால், ஏராளமான பக்க விளைவுகள் நிச்சயம் வரும். அதில் ஒன்று தான், வாயு தொல்லை மற்றும் அதிகமாக வயிற்று பகுதி உப்பி கொண்டே போவது. பார்ப்பதற்கு ஒல்லியாக இருந்தாலும் பலருக்கு இந்த வயிறு உப்பிசம் மிக பெரிய பிரச்சினையாக உள்ளது. இதனை எப்படி நம் முன்னோர்களின் முறைப்படி சரி செய்வது என்பதை இனி அறிவோம்.

எதனால் உப்பி விடுகிறது..? இந்த பிரச்சினைக்கு முக்கிய காரணம் வாயுக்கள் அதிகம் உள்ள உணவு பொருட்களை நாம் உண்பதே. குறிப்பாக ப்ரோக்கோலி, பீன்ஸ், குளிர்பானங்கள், காலிஃளார் போன்றவை முதன்மையான காரணிகளாக உள்ளது. மேலும், இந்த நிலை உங்களுக்கு மலச்சிக்கல், வாயு தொல்லை, வயிறு உப்பசம் என பல கோளாறுகளை தரும்.

அறிகுறிகள் என்னென்ன..? உங்களுக்கு இந்த பிரச்சினை உள்ளதா..? என்பதை அறிந்து கொள்ள ஒரு எளிய வழி முறை உள்ளது. இவற்றின் அறிகுறிகளை வைத்தே நாம் கண்டறிந்து விடலாம். – வயிற்றில் பாரமாக இருப்பது – வயிற்றுக்குள் அதிகப்படியான வாயு தொல்லை – அடிக்கடி ஏப்பம் விடுவது – வயிற்று வலி – அடிக்கடி ஏதே சத்தம் வயிற்றுக்குள் கேட்பது – காய்ச்சல், பசியின்மை

டிடாக்ஸ் நீர் பொதுவாக இது போன்ற பிரச்சினைக்கு நாம் பல வகையான மாத்திரைகளை சாப்பிடுவோம். ஆனால், எளிமையாக இதனை குணப்படுத்த இந்த நீர் ஒன்றே போதும். தேவையானவை :- வெள்ளரிக்காய் 1 ஆப்பிள் 1 எலுமிச்சை 1 செய்முறை :- முதலில் வெள்ளரிகையையும், ஆப்பிளையும் சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும். பிறகு எலுமிச்சையை சாறு போன்று பிழிந்து இவற்றுடன் கலந்து உடனே குடித்து விடவும். வேண்டுமென்றால், இந்த ஜுஸை வடிகட்டி குடித்து கொள்ளலாம். இவ்வாறு தினமும் 1 முறை குடித்து வந்தால் வயிற்று உப்பசம் காணாமல் போய் விடும்.
சீமை சாமந்தி டீ வயிற்று உப்பி கொண்டே போவதை விரைவிலே குணப்படுத்த இந்த சீமை சாமந்தி டீ உதவும். அதற்கு தேவையானவை… தண்ணீர் 1 கப் தேன் சீமை சாமந்தி பூ செய்முறை :- நீரை கொதிக்க விட்டு அதில் சீமை சாமந்தி பூவை போடவும். 5-10 நிமிடம் கொதிக்க விட்டு, ஆறியவுடன் வடிகட்டி கொள்ளவும். இந்த டீயுடன் தேன் வேண்டுமானால் சேர்த்து கொள்ளலாம். தினமும் 2 அலல்து முறை இந்த டீயை குடித்து வந்தால் எளிதாக வயிற்று உப்பசத்தை குறைத்து விடலாம்.

இஞ்சி டீ வயிற்று உப்பி கொண்டிருக்கும் பிரச்சினைக்கு வேறொரு அற்புதமான தீர்வு இந்த இஞ்சி தான். தண்ணீரை கொதிக்க விட்டு அதில் சிறிது இஞ்சியை நசுக்கி போடவும். 5 நிமிடம் கொதிக்க விட்ட பின், இதனை வடிகட்டி கொள்ளவும். பிறகு இவற்றுடன் தேவையென்றால் தேனை கலந்து கொள்ளலாம்.புதினா டீ உங்களின் பிரச்சினையை மிக சுலபமாக குணப்படுத்த கூடிய ஆற்றல் இந்த புதினா டீயிற்கு உள்ளது. இதனை தயாரிக்க… தேவையானவை :- புதினா இலைகள் சிறிது 1 கப் நீர் தேன்

செய்முறை :- முதலில் நீரை கொதிக்க விட்டு, பிறகு கை நிறைய புதினா இலைகளை அந்த நீரில் போடவும். 5 நிமிடம் மிதமான சூட்டில் கொதிக்க விட்டு இறக்கி கொள்ளவும். பிறகு இதனை வடிகட்டி 1 ஸ்பூன் தேன் கலந்து குடித்து வரலாம். இவ்வாறு ஒரு நாளைக்கு 2 முறை குடித்து வருவதால் செரிமான பிரச்சினை, வயிற்று உப்பசம் போன்ற பல பிரச்சினைகள் குணமாகும்.

எலுமிச்சை வைத்தியம் நம் வீட்டில் இருக்கும் இந்த எலுமிச்சையை வைத்தே நாம் வயிற்று உப்பசத்தை எளிதாக குணப்படுத்தி விடலாம். அதற்கு, முதலில் நீரை கொதிக்க விட்டு அதில் எடுத்து கொள்ளவும். பிறகு இதனுடன் எலுமிச்சை சாற்றை 1 ஸ்பூன் கலந்து குடித்து வரவும்.இந்த எலுமிச்சை நீரை தினமும் காலையில் குடித்து வந்தால் விரைவாக உப்பிய வயிறு குறைந்து விடும். வாழைப்பழம் தினமும் ஒன்று அல்லது 2 வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் மிக எளிமையாக இந்த வயிற்று பிரச்சினைக்கு நாம் முற்றுப்புள்ளி வைத்து விடலாம். ஏனெனில், வாழைப்பழத்தில் அதிக அளவில் நார்சத்து உள்ளது. மேலும், இதில் பொட்டாசியமும் நிறைந்துள்ளது. எனவே, உங்களின் பிரச்சினைக்கு இது அருமையான தீர்வை தரும்.மேற்சொன்ன முறைகளை வைத்தே உங்களின் வயிற்று உப்பசத்தை எளிமையாக குணப்படுத்தி விடலாம் நண்பர்களே.