புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் நியமனம்

புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக L.M.D. தர்மசேன நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்வி அமைச்சின் மேலதிக செயலாளராக L.M.D. தர்மசேன இதுவரை கடமையாற்றியிருந்தார்.

இவர், இலங்கை கல்வி நிர்வாக சேவையின் விசேட தரத்தை சேர்ந்த அதிகாரியாவார்.

பசறை மத்திய கல்லூரியில் ஆசிரியராக அரச சேவையில் இணைந்துகொண்ட L.M.D. தர்மசேன, ஹங்வெல்ல ராஜசிங்க வித்தியாலயத்தின் பிரதி அதிபராகவும், கொழும்பு ஆனந்தா கல்லூரி மற்றும் மஹானாம கல்லூரி ஆகியவற்றின் அதிபராகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.

பரீட்சைகள் ஆணையாளராக கடமையாற்றிய சனத் பீ. பூஜித் ஓய்வு பெறுவதால் ஏற்பட்ட பதவி வெற்றிடத்திற்கு L.M.D.தர்மசேன நியமிக்கப்பட்டுள்ளார்.