தனிமைப்படுத்தல் முகாம்களில் இதுவரை 7,500க்கும் அதிகமானவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்…!!

முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து இதுவரை சுமார் 7,500க்கும் அதிகமானவர்கள் வீடு திரும்பியுள்ளனர். அவர்கள் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை வெற்றிகரமாக நிறைவு செய்து அங்கிருந்து வெளியேறியுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான விசேட செயலணி தெரிவித்துள்ளது.நேற்றைய தினத்திலும் 242 பேர் தனிமைப்படுத்தல் இராணுவ மத்திய நிலையங்களில் இருந்து வெளியேறியதாக அந்த செயலணி தெரிவித்துள்ளது.மேலும், 3700 பேர் வரையில் தற்போது முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான விசேட செயலணி தெரிவித்துள்ளது.இவர்கள் 37 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.