வீடுகளில் முடங்கிக் கிடக்கும் உயர்தர மாணவர்களுக்கு ஓர் நற்செய்தி….. இணையத்தில் உயர்தர மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் யாழ் ஆசிரியர்…..!!

கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவத் தொடங்கி பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு கொண்டது மட்டுமின்றி, உலக மக்களை வீட்டுக்குள்ளே முடக்கி விட்டது.2020 ஆம் ஆண்டில் இப்படி ஆகுமென்று எவரும் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டோம். நல்ல வேளையாக இணையம் அதாவது இன்ரநெற் இருப்பதனால் எமது மாணவர்களுக்கு பெரும் ஆறுதலாக பொழுது போக்கு அம்சங்கள் மட்டுமல்லாமல், தமது கல்வியையும் மேற்கொள்ள முடிகின்றது. குறிப்பாக எமது யாழ் மாணவர்கள் தமது கல்வியை இணையத்தில் குறிப்பாக வட்ஸ் அப் செயலி, முகநூல் முதலானவற்றில் தொடர சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இந்த வேளையில் கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக இரசாயனவியல் துறையில் தனக்கென தனியிடம் பெற்று வரும் யாழ் கோண்டாவில் பிரதேசத்தை சேர்ந்த இளம் ஆசிரியரான V.K நந்தா என்பவர், முகநூல் வழியாக பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் கல்வித் தாகத்தை தீர்ப்பதுடன், மிகவும் தெளிவான முறையில் விரிவாக கற்பித்து வருகிறார்.பாடசாலைகள் தனியார் நிறுவனங்கள் முடங்கியிருக்கும் இவ்வேளையில் மேற்படி ஆசிரியரின் செயற்பாட்டினால் பெருமளவு மாணவர்கள் நன்மையடைந்துள்ளனர். அத்துடன் இவரது முகநூல் இணைய முகவரிக்கு வருகை தரும் பயனாளர்களும் அதிகரித்துள்ளனர்.

2015 Mcq (1-29)

Posted by Nantha Kajanantha on Monday, March 30, 2020