நாட்டில் நிலவும் வானிலை மாற்றம் காரணமாக திடீரென நுவரெலியா போன்று மாறியது கொழும்பு

நாட்டில் நிலவும் வானிலை மாற்றம் காரணமாக கொழும்பு நகரம் நுவரெலியா போன்று காட்சியளித்துள்ளது.

இன்று காலையில் கொழும்பு நகரம் நுவரெலியா போன்று காட்சியளிக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறன.

கொழும்பின் பல நகரங்கள் பனி மூட்டத்தால் மூடியிருந்ததுடன் கடும் குளிரான வானிலையும் காணப்பட்டது.

குறிப்பாக கொழும்பு ஹைலெவல் வீதியில் கொட்டாவையில் இருந்து கொழும்பு வரையான பகுதியில் அதிக அளவில் பனி மூட்டம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.