தனது காதலனை சந்திக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! பிரித்தானியாவில் சம்பவம்

பிரித்தானியாவில் தனது காதலனை சந்திக்க சென்ற பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் வசித்து வருபவர்தான் 18 வயதான Bobbi-Anne McLeod. இவர் கடந்த சனிக்கிழமை Devonயில் உள்ள Plymouth பகுதியில் தனது காதலரை சந்திக்க சென்றுள்ளார்.

இந்நிலையில் Bobbi இரவு நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் அந்த பெண்ணின் பெற்றோர்கள் அவரது காதலர் வீட்டிற்கு சென்றுள்ளனர். ஆனால் அவரது காதலர் Bobbi தன்னை பார்க்க வரவில்லை என்று கூறியதால் அதிர்ந்து போன பெற்றோர்கள் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்தனர்.

குறித்த முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் தீவிர தேடுதலில் இறங்கிய நிலையில் ஒரு வாரம் கழித்து Bobbi கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். Bobbiயின் கொலை விவகாரத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸ் இரண்டு நபர்களை கைது செய்துள்ளார். இந்நிலையில் அந்த கொலை சம்பவம் தொடர்பில் Bobbiயின் சகோதரர் முகநூலில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த முகநூல் பதிவில், மீண்டும் சந்திக்கும் வரை சகோதரியாக நான் உன்னை காதலிக்கிறேன். நீ இதற்குத் தகுதியானவர் அல்ல.. Bobbi என்பவள் ஒரு அழகான, திறமையான பெண். உங்களை என் சகோதரியாகப் பெற நான் கொடுத்து வைத்து இருக்கிறேன். இப்போது நீ ஓய்வெடுக்க வேண்டிய நேரம் என்று கூறியுள்ளார்.

மேலும், ஒரு வாரமாக காலமாக அவள் காணவில்லை என்பதால் பொலிஸ் உடன் சேர்ந்து நாங்களும் தீவரமாக தேடி வந்தோம். எங்களுக்கு உதவி செய்யக்கோரி வீதி முழுவதும் கெஞ்சினோம். அவளுடைய ஹெட்ஃபோன்கள் பாக்சி பேருந்து நிலையத்தில் இருந்தது.

இருப்பினும் குறித்த இடத்தில் எந்த தடயமும் இல்லை என பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலையின் உண்மையான காரணத்தை கண்டுபிடிக்க பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.