வாகன இறக்குமதி தொடர்பில் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

வாகன கனவுடன் இருக்கும் நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் எரிபொருளில் இயங்கும் வாகனங்களுக்குப் பதிலாக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை இறக்குமதி செய்ய எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கல்யாணி பொன்நுழைவு எனப்படும் புதிய களனி பாலத்தைத் நேற்று (24) திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

எங்களிடம் நிலக்கரி இல்லை, எண்ணெய் இல்லை, எரிவாயு இல்லை. ஆனால் எங்களிடம் தண்ணீர், காற்று, சூரிய ஒளி என்பன இருக்கிறது.

நம் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் எரிபொருளில் 71 சதவீதமானவை வாகனங்களுக்காகக் கொண்டு வரப்படுகின்றதாயின், ஏன் நாட்டுக்கு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய முடியாது.

நாம் இவற்றைச் சிந்தித்துத் தீர்வொன்றைக் கொண்டுவர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக இலங்கைக்கான வாகன இறக்குமதி முற்றாக நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.