கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் திடீர் உயர்வு!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 529 பேர் இன்று(வியாழக்கிழமை) இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 60 ஆயிரத்து 134 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 17 ஆயிரத்து 502 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 471 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 28 ஆயிரத்து 400 ஆக அதிகரித்துள்ளது.