பாடசாலை மாணவர்களுக்கு மிக முக்கியமான செய்தி…மீண்டும் ஆரம்பிக்கும் பாடசாலைகள்.!! கல்வி அமைச்சு வகுத்துள்ள புதிய திட்டம்..!!

வகுப்பறையில் 30 மாணவர்களை இரு குழுக்களாக பிரித்து கல்வி புகட்டும் நடவடிக்கையை நடைமுறைப்படுத்தவுள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப் பெரும தெரிவித்துள்ளார். நாட்டில் மீண்டும் இயல்பு வாழ்க்கை திரும்பியிருக்கும் நிலையில் கல்வி நடவடிக்கைள் தொடர்பாக தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இதன்போது தொடர்ந்தும் தகவல் வெளியிட்ட அவர்,வாரத்தில் ஏழு நாட்களிலும் பாடசாலைகளை நடத்துவது குறித்து கல்வியமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.கொவிட் 19 பரவல் காரணமாக முன்னெடுக்க முடியாமல் போன பாட விதானங்களை மீள முன்னெடுப்பதனை நோக்காக கொண்டே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.மாணவர்களையும், ஆசிரியர்களையும் வாரத்தில் நான்கு நாட்களுக்கு மாத்திரம் பாடசாலைகளுக்கு அழைப்பது தொடர்பான முறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் அவதானம் செலுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.அதற்கமைய 30 மாணவர்களை கொண்ட வகுப்பறையில் இரு குழுக்களாக மாணவர்களை பிரித்து கல்வி புகட்டும் நடவடிக்கையை நடைமுறைப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.