திடீரென வெடித்து சிதறிய சிலிண்டர்; அச்சத்தில் மக்கள்

பன்னிப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொட்டாவையில் உள்ள வீடொன்றில் இன்று காலை சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியுள்ளது. இதன் காரணமாக சமையலறை மற்றும் ஏனை அறைகளில் சிறிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

எனினும் அச்சந்தர்ப்பத்தில் வீட்டில் யாரும் இருக்கவில்லை என்பதனால் , உயிர்ச் சேதங்களோ, காயங்களோ ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை நாட்டின் அண்மைக்காலமாக , சமையல் எரிவாயு வெடித்துச் சிதறும் சம்பவங்கள், கொழும்பு, வெலிகம மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களிலும் இடம்பெற்றள்ளது.

இந்நிலையில் தரமற்ற காஸ் சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதால் அதில், கசிவு ஏற்படுவதனால் வெடிப்பு சம்பவங்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.