யாழ் பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் மாணவியொருவரின் தவறான முடிவால் பறிபோன உயிர்! சோகத்தில் குடும்பத்தினர்

யாழ் பிரபல பாடசாலை ஒன்றில் , உயர்தர மாணவியொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ள சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

அரியாலை பிரதேசத்தில் இன்று அதிகாலை 1 மணியளவில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை மாணவியான பிரேமச்சந்திரன் திசாரா (17) என்பவரே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.

குறித்த மாணவி இன்றைய தினம் செயன்முறை பரீட்சை தொடர்பாக பாடசாலைக்கு வருமாறு ஆசிரியரால் அழைக்கப்பட்டிருந்தார்.

அதற்கான தயார்ப்படுத்தல்களை செய்துவிட்டு குடும்பத்தினருன் ர் மகிழ்ச்சியாக தொலைக்காட்சி பார்த்துவிட்டே மாணவி இந்த தவறான முடிவை எடுத்துள்ளதாக உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.