தற்போதைய அரசாங்கத்தினால் அண்மையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

தற்போதைய அரசாங்கத்தினால் அண்மையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பட்டதாரிகளை நிரந்தரமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்த பட்டதாரிகளின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க(Roshan Ranasinghe) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதன்படி தற்போது அவர்கள் மாதச் சம்பளமாக பெறும் ரூ.20,000, ரூ.41,000 ஆக அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.