இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதம் என்பவை தொடர்பில் தீர்மானமொன்றை எட்டியுள்ளது.

அதன்படி அவற்றை முறையே 5.00% மற்றும் 6.00% ஆக அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் நடைபெற்ற இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபை கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.